ஜனாதிபதி அனுரவை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (02) கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கடல் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என உயர்ஸ்தானிகர் இந்தச் சந்திப்பில் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையினால் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிப்பதாகவும், இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்சன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு பொருளாதாரத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை ஒரு முக்கிய அங்கமாக சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.