விவசாயிகளுக்கான உர மானியம் 15,000 ரூபாயை வழங்க தீர்மானம்.
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை 02 கட்டங்களாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.எம். விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை பொதுத் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட 15000 ரூபா உர மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக விடுவிக்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.
இதனால் அடுத்த பருவத்தில் மண் உர தேவைக்கான பணத்தை விவசாயிகள் பெற முடியும்.
ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட 10000 ரூபா தொகையானது தேர்தலின் பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் படி, சாகுபடியை துவங்கும் விவசாயிகள் பிரச்னையின்றி, உர மானிய தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
அண்மையில் உர மானியத்தை ஹெக்டேருக்கு 15000 ரூபாவிலிருந்து 25000 ரூபாவாக அதிகரிக்க ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார்.