ஜனாதிபதி அநுரகுமாரவைச் சந்தித்த சுமந்திரன்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சுமந்திரன், சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் பேசினார் என்று அறியமுடிந்தது.
………….