மத்திய கிழக்குப் போர் , இலங்கை பொருளாதாரத்திலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் : மோகன் சமரநாயக்க

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கையும் கடுமையாக பாதிக்கப்படலாம் என சர்வதேச தகவல் ஆய்வாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்தார்.
மீண்டும் இஸ்ரேலால் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படலாம்.
இதேவேளை, உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிட்டால் அதனை தாங்கிக் கொள்வது சற்றும் கடினமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக ஏற்கனவே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சந்தை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.