தாய்லந்தில் பள்ளிப் பேருந்து தீப்பற்றியது – மாண்டோருக்கு இறுதிச்சடங்கு பிரார்த்தனை.
தாய்லந்தில் பள்ளிப் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தில் மாண்டோருக்கு இறுதிச்சடங்குப் பிரார்த்தனை நேற்று (3 அக்டோபர்) தொடங்கியிருக்கிறது.
பிரார்த்தனை 5 நாள்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் 23 பேர் மாண்டனர். அவர்களில் 20 பேர் மாணவர்கள்; மூவர் ஆசிரியர்கள்.
Wat Khao Phraya Sangkharam பள்ளியின் மண்டபத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் மாண்டோரின் உற்றார் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
23 சவப்பெட்டிகளின் மீது மாண்டோரின் புகைப்படங்கள், மலர்கள், விளையாட்டுப் பொருள்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன.
“இரு பேரப்பிள்ளைகளையும் பறிகொடுத்தேன்,” என்று பாட்டி ஒருவர் கூறியிருந்தார்.
“நான் ஒரு நிருபராக வேலை செய்கிறேன். இது போன்ற சம்பவம் எனது உறவினருக்கு நடக்கும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பேருந்தில் இருந்த பிள்ளைகள் தப்பியிருக்க வாய்ப்பில்லை,” என்று இன்னொருவர் பகிர்ந்தார்.
சடலங்கள் அடுத்த வாரம் (8 அக்டோபர்) தகனம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.