காஞ்சனா, பிரமித, ஷெஹான் ஆகியோர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிப்பு.

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக அவர்களின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று இளம் அரசியல்வாதிகளும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.