நான்கு மாகாணங்களில் தாண்டவமாடும் டெங்கு.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வருடத்தில் இதுவரை 39 ஆயிரத்து 698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16 ஆயிரத்து 766 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது இம்மாகாணத்திலேயே ஆகும்.

மேலும், வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4 ஆயிரத்து 792 நோயாளர்களும், மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 91 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 4 ஆயிரத்து 12 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 19 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
…………….

Leave A Reply

Your email address will not be published.