இஸ்ரேலுடன் தொடர்ந்து போரிடுவோம்!” – ஈரானின் உச்சத்தலைவர்.
ஈரானின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei), இஸ்ரேலுடன் தொடர்ந்து போரிடப் போவதாகக் கூறியிருக்கிறார்.
அண்மையில் ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அவர் தற்காத்துப் பேசினார்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் பாரசீக மொழி பேசும் பல்லாயிரக் கணக்கான மக்கள் நடுவே திரு கமேனி பேசினார்.
வட்டாரத்தில் இருக்கும் ஈரானின் கூட்டணிப் படைகள் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் சொன்னார்.
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு எத்தகைய பதிலடி தருவது என்று இஸ்ரேல் யோசித்துக் கொண்டிருக்கும்போது திரு கமேனியின் பேச்சு வந்திருக்கிறது.
இஸ்ரேலைத் தாக்கும் எந்த நாட்டுக்கும் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் யொவேவ் கலாண்ட் (Yoav Gallant) கூறினார்.