அரசு மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு.. 600% வரியா..?

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வாகனங்களை மீள இறக்குமதி செய்யும் போது பாரியளவில் வரி அதிகரிக்கப்படுவதாக வெளியாகும் வதந்திகள் பொய்யானவை என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு 600% வரி விதிக்கப்படும் என வதந்திகள் பரவி வருவதாகவும், ஆனால் அவ்வாறு வரி விதித்தால் வாகனங்களை யாரும் வாங்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வதந்திகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி கார் டீலர்ஷிப் உரிமையாளர்கள் உள்ள வாகனங்களை விற்க முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதியின் பின்னர் தற்போது வழக்கத்திற்கு மாறாக உயர்ந்து வரும் விலை சாதாரண விலைக்கு குறையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.