அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கிறது.
கமலா ஹாரிஸ் கடைசி நிமிடம் வரை போட்டி கடுமையாகவே இருக்கும் என்று கூறினார்.
அவர் மிச்சிகன் (Michigan) மாநிலத்துக்குச் சென்று, அரபு-அமெரிக்கத் தலைவர்களைச் சந்தித்தார்.
பிறகு மிச்சிகன் மாநிலத்தின் ஆகப் பெரிய பிளின்ட் (Flint) நகரில், பேரணியில் அவர் பேசினார்.
டோனல்ட் டிரம்ப் ஜார்ஜியா (Georgia) மாநிலத்துக்குச் சென்று ஹெலீன் புயல் ஏற்படுத்திய பாதிப்பைப் பார்வையிட்டார்.
பிறகு நார்த் கரோலைனா (North Carolina) மாநிலத்தில் அவர் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் பேசினார். இன்று அவர் பென்சில்வேனியா (Pennsylvania) மாநிலத்தில் அவர் மீது கொலைமுயற்சி நடத்தப்பட்ட பட்லர் (Butler) நகருக்குச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் எந்தப் பக்கமும் சாயக்கூடிய ஏழு மாநிலங்கள் முடிவைத் தீர்மானிக்கலாம் என்று கருதப்படுகிறது.
அரிஸோனா (Arizona) , ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா (Nevada), நார்த் கரோலைனா, பென்சில்வேனியா, விஸ்கோன்சின் (Wisconsin) ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.