இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்த ஐநா.
ஐக்கிய நாட்டு நிறுவனம் மேற்குக் கரையில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைச் சட்டவிரோத ஆகாயத் தாக்குதல் என்று கண்டித்திருக்கிறது.
அதில் 18 பேர் மாண்டதாகப் பாலஸ்தீன வட்டாரத்தின் சுகாதார அமைச்சு கூறியது.
மேற்குக் கரையின் துல்கரீம் (Tulkarem) அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் குறைந்தது 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சொல்கிறது.
இஸ்ரேலியத் துருப்புகள் தொடர்ந்து சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்ளும் கவலை தரும் போக்கின் ஒரு பகுதி இது என்று உலக நிறுவனம் சாடியது.
லெபனானில் ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்தும் போரிலும் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிர் உடற்சேதம் அறவே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.