சத்தீஸ்கரில் 28 மாவோ கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை.
இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில் (Chhattisgarh) பாதுகாப்புப் படையினர் 28 மாவோ கிளர்ச்சியாளர்களைச் சுட்டுக் கொன்றனர்.
அந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் காயமுற்ற பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவர் ஹெலிகாப்டர் வாயிலாக மீட்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருக்கிறார்.
மாவோ கிளர்ச்சியாளர்களைச் சரணடையுமாறு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டிருந்தார். இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சில நாள்களுக்கு முன்னர் அவர் எச்சரித்திருந்தார்.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 190 மாவோ கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக AFP செய்தி கூறுகிறது.
இந்தியாவில் 60 ஆண்டுக்கு முன்னர் தோன்றிய மாவோ கிளர்ச்சியாளர்களைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
2026ஆம் ஆண்டுக்குள் நக்சலைட்டுகளை முற்றாக அழிக்க இந்தியா இலக்குக் கொண்டிருக்கிறது.