சுயசக்தி கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.
சுயசக்தி கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை வெளியீட்டிற்கு ஏற்ப இளம் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களின் நிதித் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாக தற்போது சில புதிய மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுயசக்தி கடன் திட்டமுறை தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தெளிவூட்டும் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில்(08) மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சுயசக்தி கடன் திட்டத்துடன் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, 17 வணிக வங்கிகள், இலங்கை மத்திய வங்கி ஆகியவை சம்பந்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப் பணிப்பாளர் அவர்கள் குறித்த கடன் திட்டம் மற்றும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.
மேலும் கடந்த காலங்களில் இக் கடன் திட்டங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிராந்திய மற்றும் பிரதேச வங்கி முகாமையாளர்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.