தென்னிலங்கை போல் அரசியல் புரட்சியை வடக்கு தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள் – வன்னியில் தனித்துக் களமிறங்கும் சிறி ரெலோ கட்சி தெரிவிப்பு.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சிறி ரெலோ கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது என்று அக் கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். அத்தகையதொரு அரசியல் புரட்சியை வடக்கு தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள்.

கடந்த காலங்களில் தாம் தெரிவு செய்த உறுப்பினர்களால் ஏமாந்த நிலையில் அவர்களைப் புறக்கணித்து புதிய துடிப்புள்ளவர்களை இம்முறை நாடாளுமன்றம் அனுப்புவதற்குத் தமிழ் மக்களும் தயாராகி வருகின்றார்கள்.

அம் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் துடிப்புள்ள இளம் மற்றும் திறைமை வாய்ந்த வேட்பாளர்களுடன் சிறி ரெலோ கட்சி ஜனநாயகத் தேசியக் கூட்டணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அதற்கு உங்களது ஆதரவையும் வாக்கையும் வழங்கி வன்னியை மாற்ற ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.