கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணிவரை, நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 12,13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளிலும், கொழும்பு 01 மற்றும் 02 ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது