காஸாவில் தொடரும் போருக்கு எதிராக கண்டனம் தெரிவித்த உலக நாடுகள்.
காஸாவில் தொடரும் வன்முறைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஸாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தொடங்கி இன்றோடு ஓராண்டாகிறது.
தம்முடைய பதவிக்காலத்தில் பாலஸ்தீன வட்டாரத்தில் இதுபோன்ற மோசமான உயிருடற்சேதத்தைக் கண்டதில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் கூறியுள்ளார்.
லெபனானில் அபாயம் தொடரும் வேளையில், காஸாவில் உடனடிப் போர் நிறுத்தம் தேவை என்று G7 தொழில்வள நாடுகள் வலியுறுத்தின.
லெபனான் உள்ளிட்ட அரபுச் சகோதரர்களுடன் இணைந்து சீனா நீதியின் பக்கம் நிலைத்திருக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்தார்.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையைக் கண்டித்த மலேசியாவும் இந்தோனேசியாவும் பாலஸ்தீனர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தின.
ஜப்பான், நியூசிலந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் காஸா மக்கள் மீதான வன்முறைக்கு முடிவுகட்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தின.