பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : சீனக் குடிமக்கள் இருவர் மரணம் : சீன நாட்டவரைக் குறிவைத்து தாக்குதல்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சீனக் குடிமக்கள் இருவர் மாண்டனர்.
ஜின்னா அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே நடந்த வெடிப்பில் பாகிஸ்தானியர்கள் பலர் மாண்டதாகப் பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.
சிலர் காயமடைந்ததாகவும் அது குறிப்பிட்டது.
உயிரிழந்தோர் குறித்த முழு விவரம் தெளிவாகத் தெரியவில்லை.
சிந்து மாநிலத்தின் மின்சாரத் திட்டத்தில் வேலை செய்யும் சீனப் பொறியாளர்களின் வாகனத்தைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
BLA எனும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அண்மைக்காலமாகப் பாகிஸ்தானில் சீன நாட்டவரைக் குறிவைத்து அந்தக் குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சீனக் குடிமக்களைப் பத்திரமாக இருக்கும்படியும் முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் சீனத் தூதரகம் கேட்டுக்கொண்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தாக்குதலை நடத்தியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் அது கூறியது.