பசறை நகரில் உந்துருளியும் ஆட்டோவும் விபத்து.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பசறை நகரில் உந்துருளியும் ஆட்டோவும் விபத்து.
அம்பத்தனையிலிருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த உந்துருளியும் ஆட்டோவும் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரில் பெண் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் வாகனத்தை செலுத்திய ஆண் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.