உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டாலர் கடன் உதவி பெறும் இலங்கை
இலங்கை பொருளியல் நெருக்கடியிலிருந்து விரைந்து மீண்டுவர உலக வங்கியிடமிருந்து 200 மில்லியன் டாலர் கடன் உதவியைப் பெறவிருக்கிறது.
இடசாரிக் கட்சியைச் சேர்ந்த அதிபர் அனுர குமார திசாநாயக்க பொறுப்பேற்ற பிறகு அந்நாடு பெறும் முதல் வெளிநாட்டு நிதி அது.
இலங்கை 2022ஆம் ஆண்டில் பொருளியல் வீழ்ச்சியைச் சந்தித்தபோது உலக வங்கி 500 மில்லியன் டாலர் கடன் வழங்கியது.
தற்போது கொடுக்கப்படும் கடன் நாட்டின் பொருளியல் முன்னேற்றத்துக்குக் கைகொடுக்கும் என்று அது தெரிவித்தது.
புதிய அதிபர் திசாநாயக்க சுமார் 15 பில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகக் கடனை மறுஆய்வு செய்ய அனுமதியளித்தார்.
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க சர்ச்சைக்குரிய அந்தக் கடனுக்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
2022ஆம் ஆண்டு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டது.