ஓராண்டுப் போரில் ஹமாஸின் 40,000 இடங்களைத் தாக்கியிருக்கும் இஸ்ரேல்.

இஸ்ரேல் கடந்த ஓராண்டில் காஸா வட்டாரத்தில் 40,000க்கும் அதிகமான இடங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

சுமார் 4,700 சுரங்கப் பாதைகளைக் கண்டுபிடித்து, எறிபடை பாய்ச்சத் தயாராக இருந்த 1,000 இடங்களையும் அழித்துள்ளது.

ஹமாஸ் கிளர்ச்சிக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில் இஸ்ரேலிய ராணுவம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.

அந்தத் தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் ஹமாஸ் இடையே முழுவீச்சில் ஓராண்டாகச் சண்டை நடக்கிறது.

மேலும் பல தகவல்களையும் இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டது.

2023 அக்டோபர் 7க்குப் பின்…

?கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் – சுமார் 700 பேர்.

?காயமடைந்த வீரர்கள் – சுமார் 4,500 பேர்

?போருக்கு அழைக்கப்பட்ட வீரர்கள் – 300,000 பேர் (82% ஆண்கள், 18% பெண்கள்)

?காஸா இஸ்ரேல் மீது செலுத்திய எறிபடைகள் – 13,200

?லெபனான் இஸ்ரேல் மீது செலுத்திய எறிபடைகள் – 12,400

?லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடங்கள் – 4,900

?கொல்லப்பட்ட லெபனான் தரப்பினர் – 800 பேர்

ஹமாஸ் சென்ற ஆண்டு இதே நாள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் விவகாரம் தொடங்கியது. அதில் இஸ்ரேலைச் சேர்ந்த 1,200 பேர் கொல்லப்பட்டனர். இன்னமும் 100க்கும் அதிகமானோர் ஹமாஸ் பிடியில் உள்ளனர்.

இஸ்ரேல் ஓராண்டாகக் கொடுத்துவரும் பதிலடியில் 42,000க்கும் அதிகமானோர் மாண்டதாக காஸா சுகாதார அமைச்சு சொல்கிறது.

Leave A Reply

Your email address will not be published.