டென்மார்க் இஸ்ரேலியத் தூதரகம் அருகே மீண்டும் வெடிப்பு.
ஹமாஸ் கிளர்ச்சிக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகும் நிலையில் டென்மார்க்கிலுள்ள இஸ்ரேலியத் தூதரகம் அருகே புதிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்தத் தூதரகம் தலைநகர் கோப்பன்ஹேகனில் (Copenhagen) அமைந்துள்ளது.
தூதரகத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் வெடிப்பு நிகழ்ந்தது.
5 நாள்களுக்கு முன்னர்தான் அப்பகுதியில் 2 வெடிப்புகள் ஏற்பட்டன.
அதன் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்குமுன்னர் நடந்த அந்த வெடிப்புகளுக்கும் தற்போதைய வெடிப்புக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயப்படுகிறது.
துப்பாக்கிச்சூட்டினால் கூட அந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்ரேலியத் தூதரகத்துக்கு அருகிலிருக்கும் குடியிருப்புக் கட்டடத்துக்கு முன் வெடிப்பின் தடயத்தைக் காட்டும் படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.