சஜித் போட்டியிடும் போது பல SJB சிரேஷ்டர்கள் தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வர, வரிசையில் நிற்கின்றனர்!

SJB முன்னாள் எம்.பி.யும் பொலன்னறுவை மாவட்ட தலைவருமான கிங்ஸ் நெல்சன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த வருடத்தில் SJBயின் மூத்தவர்கள் தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உட்பட எமது சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்த ஆண்டு தேசியப் பட்டியலில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார்.

எனினும், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இம்முறையும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவார் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.