அரச வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

பொலன்னறுவை வெலிகந்த நகரிலுள்ள அரச வங்கி ஒன்றில் நேற்று (08) மாலை 6.00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் , இலக்கம் 113, சுசிரிகம, வெலிகந்த என்ற முகவரியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய டபிள்யூ.டி.ஜி. அவர்கள் அனுர விஜேசிங்க என விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தனது கடமையை முடிக்க, ரிப்பீட்டர் ரக துப்பாக்கியில் சிக்கியிருந்த தோட்டாவை அகற்றுவதற்காக முயற்சித்த போது , துப்பாக்கி வெடித்து, காவலாளியின் மார்பில் பட்டதில். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் பணிப்புரையின் பேரில் வெலிகந்த பொலிஸ் நிலையப் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.