இந்திய திரைப்பட படப்பிடிப்பு காரணமாக .. மலையக ரயில் பயணத்தை மட்டுப்படுத்த முடிவு.
இந்திய-இலங்கை கூட்டு சினிமா திட்டம் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து எல்ல ரயில் நிலையம் வரை மலையகப் பாதையில் 09.10.2024 முதல் 15.10.2024 வரை ரயிலை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலையக புகையிரதத்தில் எல்ல மற்றும் தெமோதர பகுதிக்கு இடையில் உள்ள அருக்கு 9 பாலத்தில் இந்திய – இலங்கை திரைப்படம் ஒன்று படமாக்கப்படுவதால், மேற்படி தேதிகளில் காலை 07.30 மணி முதல் மாலை 17.30 மணி வரை மலையக புகையிரத பாதைகளில் இயங்கும் ரயில்கள் , இக்காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் எல்ல புகையிரத நிலையங்கள் வரை மட்டுமே இயங்கும்.
இத்திரைப்படம் திரையிடப்பட்டதன் பின்னர் இலங்கைக்கான சுற்றுலாத்தலங்களுக்கு அதிக உல்லாச பிரயாணிகளை ஈர்க்க முடியும் என்பதால் , போக்குவரத்து அமைச்சின் அனுமதியுடன் இப்படப்பிடிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதோடு, குறித்த காலப்பகுதியில் ரயில் இயக்கம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.