இஸ்ரேலில் அரசாங்க எதிர்ப்புப் பேரணி நடத்திய பிணையாளிகளின் குடும்பத்தினர்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பிணையாளிகளின் குடும்பத்தினர் அரசாங்க எதிர்ப்புப் பேரணி நடத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து அரசாங்கம் அதிகாரபூர்வ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் அந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் குரல் கொடுத்தனர்.
அதில் தலைவர்கள் தோல்வி கண்டிருப்பதாகக் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலிய மக்கள் நம்பவே முடியாத மிகப்பெரிய விலையைக் கொடுத்ததாக அவர்கள் கூறினர்.
27 பிணையாளிகள் கொலையுண்டதும், மற்ற பிணையாளிகள் இதுவரை மீட்கப்படாமல் இருப்பதும் அரசாங்கம் அந்த விவகாரத்தில் மக்களைக் கைவிட்டுவிட்டதைக் காட்டுவதாகக் கொலையுண்ட பிணையாளி ஒருவரின் நெருங்கிய உறவினர் கூறினார்.