சிட்னி ரயில் நிலையத்தில் கோலா.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ரயில் பாதைக்கு அருகே சுற்றித் திரிந்த கோலா காப்பாற்றப்பட்டுள்ளது.
அது வேலிக்குக் கீழ் ஊர்ந்து சென்று தளமேடைக்குள் நுழைவது காணொளியில் தெரிகிறது.
பின்னர் அது வெவ்வெறு தளங்களை இணைக்கும் பாலத்தில் சென்றதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.
அதைத் தாண்டிச் சென்ற ஒரு ரயிலில் இருந்த பாதுகாவல் அதிகாரியின் கண்ணில் கோலா சிக்கியது.
அவர் உடனே மற்ற ரயில்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.
நிலையத்தைக் கடந்துசெல்லும்போது மெதுவாகச் செல்லுமாறு அவர் மற்ற ரயில்களைக் கேட்டுக்கொண்டார்.
காவல்துறை அதிகாரிகள் அந்தக் கோலாவை மீண்டும் புதர் நிலத்திற்கு அழைத்துச் சென்றதாக The Guardian குறிப்பிட்டது.
சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் கோலாக்களின் எண்ணிக்கை அதிகம்.
ஆனால் நகர மேம்பாட்டுப் பணிகளால் அவை பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்குகின்றன.
அண்மை ஆண்டுகளில் புதிதாகக் கட்டப்படும் சாலைகளால் அவற்றின் வசிப்பிடம் சிறியதாகுகிறது.
வாகன விபத்துகளுக்குள்ளாகும் கோலாக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.