சீனாவைச் சேர்ந்த 43 வயது சிலந்திப் பெண்.
சீனாவைச் சேர்ந்த 43 வயது பெண்ணுக்குச் “சீனச் சிலந்திப் பெண்” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காரணம்?
கைகளில் உறைகளும் இல்லை… பாதுகாப்புக் கருவிகளும் இல்லை…
ஆனால் அந்தப் பெண் 100 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட பாறைகளில் சர்வசாதாரணமாக ஏறுவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லுவோ டெங்பின் (Luo Dengpin) தென்மேற்குச் சீனாவில் உள்ள குய்ஸோ (Guizhou) மாநிலத்தைச் சேர்ந்தவர்.
கைகளால் பாறைகளில் ஏறுவது பழங்கால மியாவ் (Miao) பாரம்பரியத்தின் வழக்கம் என்று South China Morning Post நாளேடு தெரிவித்தது.
உலகில் அந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஒரே பெண்மணி அவர்தான் என்று தெரிவிக்கப்பட்டது.
30 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்குச் சமமான 108 மீட்டர் உயரமுள்ள பாறையில் லுவோ திறம்பட ஏறினார்.
லுவோ 15 வயது இருக்கும்போது பாறைகளை ஏறும் வித்தையை அவரின் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார்.
ஆண்களோடு போட்டிபோட வேண்டும்..
மூலிகை மருந்துகளை எடுத்து வருமானம் சம்பாதிக்க வேண்டும்..
இந்த இரண்டு காரணங்களுக்காகப் பாறைகளில் ஏறத் தொடங்கியதாக லுவோ கூறினார்.
அப்படித்தான் என்னுடைய “சிலந்திப் பெண்” பயணம் தொடங்கியதாக அவர் சொன்னார்.