ஆபாசத் திரைப்படத்தைக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்ட Qantas.
Qantas விமான நிறுவனம் அதன் விமானத்தில் இருந்த திரைகளில் ஆபாசத் திரைப்படம் காட்டப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்தது.
தொழில்நுட்பக் கோளாற்றினால் விமானத்தில் பயணம் செய்தோர் தனிப்பட்ட முறையில் திரைப்படங்களைத் தெரிவு செய்ய முடியவில்லை என்று Qantas நிறுவனம் CNN செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தது.
விமானச் சிப்பந்திகளிடம் குறைந்த திரைப்படங்களே இருந்தன.
பயணிகள் பலரின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் தெரிவு செய்த திரைப்படம் அனைவரின் திரைகளிலும் காட்டப்பட்டது.
படத்தின் பெயரை Qantas குறிப்பிடவில்லை.
ஆனால் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளிலும் படங்களிலும் திரைப்படத்தின் பெயர் “Daddio” என்று தெரியவந்ததாக CNN கூறியது.
அதில் பாலியல் காட்சிகள் இடம்பெறுவதால் அது R-Rated படமாக வகைசெய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் குழந்தைகள் திரைப்படத்திற்கு மாற்றப்பட்டது.