ஹரியானா தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு வரலாற்று வெற்றி!

ஹரியானாவில் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவாகின. அப்படி பதிவான வாக்குகள் நேற்று (8ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்போது காட்சிகள் மாறியுள்ளன. 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, ஹரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

அதேபோல், மாநில கட்சியான லோக் தல் 2 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இதன் மூலம், ஆட்சி அமைக்க தேவையான 46 தொகுதிகளுக்கும் மேலாக 48 தொகுதிகளை வென்றுள்ள பா.ஜ.க. ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை அமைக்கிறது. மேலும், 37 தொகுதிகளில் வென்றுள்ள காங்கிரஸ் வலுவான எதிர் கட்சியாக ஹரியானா சட்டமன்றத்தினுள் நுழைய இருக்கிறது.

பா.ஜ.க. ஹரியானாவில் தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போது இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்பதன் மூலம், ஹரியானா வரலாற்றில் பா.ஜ.க. தான் முதல் கட்சியாக தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கும் சிறப்பை பெற்றுள்ளது.

பா.ஜ.க.வின் தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியை பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்து தற்போது வெற்றி பெற்றுள்ளது. இதனால், விரைவில் ஹரியானாவில் நயாப் சிங் சைனி முதலமைச்சர் பதவியையும், அவரது அமைச்சரவையும் பதவியேற்கும்.

Leave A Reply

Your email address will not be published.