இந்தியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸின் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணி பெற்ற வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
“அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணிக்கும் ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இது இந்தியாவுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி.
மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த மாநிலத்தின் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் மீட்டெடுப்பதற்கான மக்களின் முடிவு. ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையை விதைக்கு தருணம் தொடங்கியுள்ளது.”