மருந்துகளை வாங்கும் பிரதமர் ஹரிணியின் அமைச்சரவை முன்மொழிவு நிராகரிக்கப்பு.
2025ஆம் ஆண்டுக்கான 305 வகை மருந்துகளை உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் , பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சரவையில் சமர்ப்பித்த மகஜர் இரண்டாவது தடவையாக நிராகரிக்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டலாம்.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தலைமையில் நேற்று (07ஆம் திகதி) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அடுத்த வருடத்திற்கு தேவையான மருந்துகளுக்கு இதுவரை உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட முறைகளை மாற்றி புதிய முறையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதிலும் எட்டு சதவீத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை வழங்குமாறு உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை மொத்தமாக ஆர்டர்கள் வழங்காத காரணத்தினால் ஜனவரி மாதத்திற்குள் மருந்துகளை விநியோகிக்க முடியாது என உற்பத்தியாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். மருந்து உற்பத்திக்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதே நிராகரிக்கப்புக்கு காரணமாகும்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டொக்டர் நிஹால் அபேசிங்கவுடன் நேற்று (08ம் திகதி) பிற்பகல் அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்காக சுகாதார அமைச்சு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுகாதார அமைச்சின் கவனம் பழைய முறையில் மருந்துகளை பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.