ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் காணாமல் போன புலஸ்தினி (சாரா) பற்றிய விபரங்கள் வெளியாகியது!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு இரகசியமாக வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்ற புலஸ்தினி மகேந்திரன் என்ற சாரா ஜாஸ்மின் என்ற பெண் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக DNA பரிசோதனை உறுதிப்படுத்தியுள்ளது என போலீஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. .
புலஸ்தினி (சாரா) உயிர் தப்பியதாகக் கருதப்பட்ட சாரா என்ற தீவிரவாதப் பெண்ணின் தாயின் DNA மாதிரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சாய்ந்தமருதில் இறந்தவர்களின் DNA மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டது. மூன்றாவது முறையாக பெறப்பட்ட பல எலும்பு துண்டுகளின் DNA மாதிரிகள் சாராவின் தாயிடமிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளுடன் ஒத்துப்போனதாக அரசாங்கத்தின் பாதுகாப்பு விஞ்ஞானப் பரிசோதனை துறை (Forensic Department) உறுதிப்படுத்தியுள்ளது.