தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் டாடாவின் உயிர் பிரிந்தது. மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், ” தனது பணிவு, இரக்கம் மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்” என்று கூறியுள்ளார்.

86 வயதான ரத்தன் டாடா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த ரத்தன் டாடா, அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், வயது மற்றும் உடல்நிலை சார்ந்த வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாடா, பத்மபூஷண், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.

Leave A Reply

Your email address will not be published.