தமிழ் மொழிக்கு தொல்லியல் படிப்பில் இடம் : எடப்பாடிக்கு கிடைத்த வெற்றி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொல்லியல் துறை முதுகலை பட்டப்படிப்பு விவகாரத்தில், தொல்லியல் பட்டப்படிப்பில் தமிழ் மொழியை இடம் பெற வைக்க வேண்டும் என்று நரேந்திர மோடி அவர்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதாவது தொல்லியல் துறை வழங்க உள்ள இரண்டு வருட முதுநிலை கல்வி பயில தகுதியான பட்டியலில் பாலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே இருந்தன.
இவ்வாறு தமிழ் மொழியைப் புறக்கணித்து தகுதிப் பட்டியலை வெளியிட்டது தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு பயில தமிழ் மொழியை தகுதிப் பட்டியலில் சேர்க்க வேண்டும். மற்ற மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் மொழி என்று குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது முதல்வரின் கோரிக்கையை ஏற்று தொல்லியல் துறை முதுகலை பட்டப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் மொழியில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் தொல்லியல் துறையில் முதுகலை பட்டப்படிப்பு பயில அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.