அநுர ஜனாதிபதியான பின்னர் 347 பில்லியன் புதிய கடன்கள் பெறப்பட்டுள்ளன.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் 347,500 மில்லியன் ரூபாவை உள்ளூர் சந்தையில் கடனாகப் பெற்றுள்ளதாக அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.
இன்றும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் Bond பத்திரங்களுக்கு அதிக தேவை காணப்படுவதாகவும் புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடரும் என்ற சந்தையின் நம்பிக்கையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறுகிறார்.
எனினும், கடன் அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகக் கூறிய அவர், நிதி நிதியத்தின் முதல் ஒருமித்த கருத்து கடன் நிலைத்தன்மையே என்றும் கூறினார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் தடவையாக 95,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணை முறி (Bond) விநியோகமும் இன்று இடம்பெறவுள்ளது.