யாழில் தபால் பெட்டிச் சின்னத்தில் இம்முறை களமிறங்கும் அங்கஜன் – ஜனநாயகத் தேசியக் கூட்டணி சார்பில் வேட்புமனு.
அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் எம்.பி. அங்கஜன் இராமநாதன் தலைமையிலான ஜனநாயகத் தேசியக் கூட்டணியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டிச் சின்னத்தில் களமிறங்குகின்றனர் .
அவர்கள் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
அங்கஜன் இராமநாதன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.