யாழில் சர்வஜன அதிகார கூட்டணி வேட்புமனு – அருண் சித்தார்த் தலைமையில் போட்டி.

சர்வஜன அதிகார கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சர்வஜன அதிகார கூட்டணியினர் பதக்கச் சின்னத்தில் களமிறங்குகின்றனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று முற்பகல் 9.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அருண் சித்தார்த் தலைமையில் சர்வஜன அதிகார கூட்டணியினர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.