டாடா அறக்கட்டளைத் தலைவராக நோயல் டாடா நியமனம்!

ரத்தன் டாடா மறைவையடுத்து, டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் சகோதரர் ஆவார்.
டாடா அறக்கட்டளைக் குழுவினர் ஏகமனதாக நோயல் டாடாவை புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இன்று காலை கூடிய டாடா அறக்கட்டளைக் குழு, நோயல் டாடாவை, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேந்தெடுப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
டோராப்ஜி அறக்கட்டளையின் 11-வது தலைவராகவும், ரத்தன் டாடா அறக்கட்டளையின் 6-வது தலைவராகவும் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகள் டாடா அறக்கட்டளைக்கு சொந்தமானவை.
யார் இந்த நோயல் டாடா?
67 வயதான நோயல் டாடா, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.
டாடா குழுமத்தில் உள்ள ட்ரெண்ட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிவற்றின் நிறுவனங்களுக்கு தலைவர் உள்பட முக்கிய பதவிகளை நோயல் டாடா வகித்து வருகிறார். இவர் டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவனத்துக்கு துணைத் தலைவராகவும் உள்ளார்.
நோயல் டாடா 2010 முதல் 2021 வரை டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவராக இருந்தார்.