முருகேசு சந்திரகுமார் தலைமையில் யாழில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்தது.
இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவைக் கையளித்தனர்.