மோசமான வானிலையால் 1107 பேர் பாதிப்பு : அசம்பாவிதம் ஏற்பட்டால் 117 தொலைபேசி எண்ணை அழைக்கவும்
அசம்பாவிதம் ஏற்பட்டால் 117 தொலைபேசி எண்ணை அழைக்கவும்
புத்தளம் முதல் களுத்துறை , மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரையில் ஒரு நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம்.
பல நாள் மீன்பிடி படகுகளுக்கு ஆபத்து இல்லை என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தத்தினால் இதுவரை 04 மாவட்டங்களில் 298 குடும்பங்களைச் சேர்ந்த 1107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா, களுத்துறை, கிளிநொச்சி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலகப் பிரிவில் 06 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக 117 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.