கற்பிட்டி விபத்தில் இராணுவச் சிப்பாய் பலி!

கற்பிட்டி பகுதியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று இரவு கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ தோனிகலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவச் சிப்பாய் எனவும், அவர் புத்தளம் புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.