வல்வைப் பாலத்துக்கு அருகில் கோர விபத்து! யாழ். தம்ரோ நிறுவன முகாமையாளர் மரணம்!!

யாழ். வடமராட்சி, வல்வைப் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்தார்.
இன்று சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் யாழ். தம்ரோ நிறுவனத்தின் முகாமையாளரே உயிரிழந்தார்.
வடமராட்சியில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் பழைய இரும்பு ஏற்றும் பட்டா ரக வாகனமும் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது.
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையில் வசித்து தற்போது உரும்பிராயை வதிவிடமாகக் கொண்டவருமான துரைலிங்கம் மலைமகன் (வயது 38) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பட்டா ரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.