டக்ளஸ் தேவானந்தாவின் EPDPயில் போட்டியிடும் இரண்டு பௌத்த பிக்குகள் .. வரலாற்றில் பௌத்த பிக்குகளை நியமித்த முதல் தமிழ் கட்சியாக சாதனை!
முன்னாள் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் கட்சியான ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கி பௌத்த பிக்கவினரை நியமித்த முதல் தமிழ் கட்சி என்ற வரலாறை படைத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த EPDP வேட்பாளர்களாக வணக்கத்திற்குரிய கிரிஎப்பனாரே விஜித தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
“தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான EPDP கட்சியில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்தேன். தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதே எங்களின் ஒரே முயற்சியே தவிர, பதவிகளுக்கு பின் செல்லவில்லை. நாங்கள் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம்” என வேட்புமனுக்களை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜித தேரர் இக்கருத்தை தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தின் EPDP பட்டியலில், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய அனைத்து இனக்குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.