88 வருடங்களின் பின்னர் அரசியலை விட்டு அமைதியான அம்பாந்தோட்டை ராஜபக்ச குடும்பம்!

88 வருடங்களின் பின்னர், இம்முறை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து ராஜபக்ச குடும்பத்தினர் எவரும் அரசியலுக்காக தமது பிரதிநிதித்துவத்தை சமர்ப்பிக்கவில்லை.

பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குழு தலைமையை முன்னாள் மின்சார இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக ஏற்கிறார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும், இவ்வருட பொதுத் தேர்தலில் எந்த மாவட்டத்திலும் போட்டியிட மாட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் வேட்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1936 ஆம் ஆண்டில், டி.எம். ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக அரசியலை தொடங்கினார், பின்னர் டி.ஏ.ராஜபக்ஷ, லக்ஷ்மண் ராஜபக்ஷ, ஜார்ஜ் ராஜபக்ஷ, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, நிருபமா ராஜபக்ஷ மற்றும் ஷியாமலால் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இம்முறை புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்டாலும் அவர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல.

Leave A Reply

Your email address will not be published.