திசைகாட்டி அலுவலகத்தை அனுமதியின்றி புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பான வாக்குவாதத்தில் கீழே தள்ளப்பட்ட நபர் மரணம்.

கண்டி அங்கும்புரவில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக புகைப்படம் எடுத்து சமூகவலைத் தளத்தில் பகிர்ந்த போது , இடம்பெற்ற வாக்குவாதத்தின் பின்னர் ,கீழே தள்ளப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வர்த்தகர் ஒருவர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக அங்கும்புர பொலிஸார் நேற்று (11) தெரிவித்தனர். .

அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் ரூமி (54) என்ற வர்த்தகரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் சம்பவ அன்று முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்சி அலுவலகத்திற்கு அருகில் வந்த வர்த்தகர் அனுமதியின்றி புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கல்ஹிந்த பகுதியில் உள்ள வர்த்தகரிடம் சந்தேக நபர் கேள்வி எழுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கீழே விழுந்து படுகாயமடைந்த தொழிலதிபர், மருத்துவமனையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் அங்கும்புர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.