சஜித்தின் துரோகம் , அஜித் மான்னப்பெரும பதவி விலகல் (Video)
SJBயின் கம்பஹா மாவட்ட நியமனப் பட்டியலில் அஜித் மான்னப்பெருமவின் பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும், இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என SJBயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.
இத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் SJBயின் வேட்பாளர் பட்டியலில் நான் ஒரு வேட்பாளராக உள்ளேன். மேலும் கம்பஹா தொகுதி அமைப்பாளராக 20 வருடங்களாக பணியாற்றியுள்ளேன்.
நான் குறிப்பாக SJBயுடன் இனிமேல் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும், ஆதரவாளர்களது வாக்கை எனக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணித்தியாலங்களுக்குள் எனது கம்பஹா தொகுதி அமைப்பாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவிடம் பணியாற்றிய ஒருவருக்கு இரகசியமாக வழங்கப்பட்டதனால் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அவருக்கு பலமுறை தொலைபேசி எடுத்தும் பேச முடியவில்லை என்றார் அஜித் மான்னப்பெரும.
கம்பஹா தொகுதி அமைப்பாளர் பதவி , ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவிடம் பணியாற்றிய வருண ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.