வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கிய 13 தலைகளது கணக்குகளைக் கிளறுகிறது புலனாய்வு அமைப்பு!

வெளிநாடுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ததாகக் கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
பணம் டெபாசிட் செய்துள்ள நிதி நிறுவனங்களிடம் இருந்து அது பற்றிய தகவல் அறிக்கைகளைப் பெறுவதுதான் முதல் நடவடிக்கை என உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
வெளிநாடுகளில் பணத்தை டெபாசிட் செய்யும் முறைகள் குறித்து இந்த நாட்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகின்றன.
இது மிகவும் கடினமான பணியாக இருந்தாலும், அதற்காக உன்னிப்பாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறும் அந்த வட்டாரங்கள், இதுபற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் செயற்படுவதாக குறிப்பிட்ட சிலர் மேடைகளில் அடிக்கடி குறிப்பிடப்பட்டு வந்தனர்.