சரஸ்வதி பூஜையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் பாடசாலைக்குள் மரணம்

சரஸ்வதி பூஜையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலையின் வகுப்பறையில் உயிரிழந்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பிராந்தியக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நோர்டன்பிரிட்ஜ் ஒஸ்போர்ன் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றிய அங்கமுத்து தயாபரன் (வயது 45) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
12ம் தேதி பள்ளியில் நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்று கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி என்று கூறி ஆசிரியர் தரையில் விழுந்ததாகவும், பின்னர் பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் திக்ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அவரை அனுமதித்தபோதும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஆசிரியர் பாடசாலையை அண்டிய ஒஸ்பன் தோட்டத்தில் வசிப்பவர் எனவும், உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.