யாழில் அங்கஜன் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் (தபால் பெட்டிச் சின்னம்) வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ஆரம்பப் பரப்புரைக் கூட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.