இரண்டு வாரத்தில் 53,900 கோடி கடன்.. ஒரு மாதத்தில் என்ன நடக்கும்? : சமன் ரத்னப்பிரிய கேள்வி

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வாரங்களுக்குள் 53,900 கோடி ரூபா கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் , சமன் ரத்னப்பிரிய குறிப்பிடுகின்றார்.
திறைசேரி உண்டியல் மற்றும் பத்திரங்களை வழங்குவதன் மூலம் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தனது முன்னைய அறிக்கைகளை உண்மையாக்க முடியாத அரசாங்கமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட வாகன கண்காட்சி , முட்டை கண்காட்சி போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இப்போது நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில அமைச்சுக்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு கூட ஆட்களை நியமிக்காமல் அரசாங்கம் இக்கட்டான நிலையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.